கமலுக்கு ரஜினியின் ஆதரவு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில்🎊 அரசை யாரும் கெஞ்சத் தேவையில்லை என்று கமல் ஹாசன் தெரிவித்தார்🎙.
நடிகர் சிவாஜி கணேசனின் 89வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய நடிகர் கமல் ஹாசன், மாநில, தேசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் அய்யா சிவாஜி கணேசன் என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை சினிமாவில் நடிக்கவில்லை என்றால் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன் என்றார். இந்நிகழ்ச்சிக்கு உள்ளே வர அனுமதி இல்லையென்றாலும், வெளியே நின்றிருப்பேன் என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்🌟 கூறியது, "அரசியலில் என் கூட வா என்றழைக்கிறார் கமல்ஹாசன். அரசியலுக்கு வர சினிமா புகழ் மட்டும் போதாது . மக்கள் வேற எதிர்பாக்குராங்க,அது என்னனு சத்தியமா எனக்கு தெரியல,கமலுக்கு தெரியலாம். "
COMMENTS